புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்.
சண்முகம்
UPDATED: Apr 21, 2024, 9:32:20 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஆண்டு திரு விழா கொடியேற்றம் கடந்த 15 ஆம் தேதி துவங்கியது.
இதன் பின்னர் விழாவில் தினமும் காலையில் சுவாமி புறப்பாடும் இரவில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், தங்க கருட சேவை, சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகன மூலம் வீதி உலாவும், நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
தேரானது வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என நான்கு வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலையை வந்தடையும். இதன் பின்னர் வருகின்ற 23ஆம் தேதி மட்டையடி உற்சவம் நித்திய புஷ்கரணியில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
24 ஆம் தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது. இதன் பின்னர் வருகிற 30-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
இந்த தேரோட்டத்தின் போது மூலவர் ஸ்ரீ பூவராகப் பெருமாள், ஸ்ரீ அம்புஜவல்லி தாயார், ஸ்ரீதேவி மூதேவி தெய்வங்கள் தேரில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.