• முகப்பு
  • ஆன்மீகம்
  • நுவரெலியா சீதை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சீர்வரிசை ஊர்வலப் பணி இன்று இறம்பொடையில்  ஆரம்பமானது

நுவரெலியா சீதை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சீர்வரிசை ஊர்வலப் பணி இன்று இறம்பொடையில்  ஆரம்பமானது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 18, 2024, 4:42:08 AM

நுவரெலியா சீதை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான சீர்வரிசை ஊர்வலப் பணி இன்று இறம்பொடையில்  ஆரம்பமானது.

நாளை 19 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 17ஆம் தேதி வியாழக்கிழமை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலயத்தில் இருந்து மாபெரும் ஆன்மீக ஊர்வலம் ஒன்று நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தை நோக்கி புறப்பட்டது.

ஊர்வலத்தில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் 05 நதிகனின் தீர்த்தம், கலசங்கள் சிதைக்கான சீர் வரிசை மற்றும் உற்சவ மூர்த்திகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் மயூராபதி அம்மன் ஆலயத்தில் ஊர்வலமாக ஆரம்பித்து காலி வீதி, மெயின் வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி ஊடாக அதிவேக நெடுஞ்சாலை வீதி ஊடாக அவிசாவளை யட்டியான்தோட்ட கினிகத்தேன ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை வட்டகொட பூண்டுலோயா வழியாக இறம்பொடை ஆஞ்சனேயர் ஆலயத்தை வந்தடைந்தது.

இன்று 18 ஆம் திகதி காலை  சீதையம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

VIDEOS

Recommended