• முகப்பு
  • ஆன்மீகம்
  • நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கட்டுத் தேரோட்டம்.

நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கட்டுத் தேரோட்டம்.

ரமேஷ்

UPDATED: May 30, 2024, 9:24:41 AM

கும்பகோணம் அருகே நாதன் கோவிலில் ஜெகநாதப்பெருமாள், திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.

இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த, புண்ணிய தலமும் ஆகும். இத்தலத்தில் குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம் இங்கு மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெற்று வருகிறது

இத்தகைய பெருமை பெற்ற வைணவ தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி பிர்மோத்ஸவப் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான இன்று ஜெகநாத பெருமாளுக்கு செண்பகவல்லி தாயார் கட்டுத் தேரில் எழுந்தருள கட்டுத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்து வந்தனர்.

நாளை 10ம் நாள் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸர்வதர் திருமஞ்சனம் ஸப்தாவரணம், புஷ்ப யாகத்துடன் இவ்வாண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

 

VIDEOS

Recommended