• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பிரளய கால அம்மனுக்கு அக்னி வெப்பத்தை தணிப்பதற்கு 1008 இளநீரை கொண்டு அபிஷேகம்.

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பிரளய கால அம்மனுக்கு அக்னி வெப்பத்தை தணிப்பதற்கு 1008 இளநீரை கொண்டு அபிஷேகம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 28, 2024, 11:11:21 AM

Kancheepuram Ekambareswarar Temple

கோவில் நகரம் என அழைக்கக்கூடிய காஞ்சிபுரத்தில் உலகப் புகழ்பெற்ற பஞ்ச பூத ஸ்தலத்தில் நிலத்திற்கு உரிய தலமாக விளங்கக்கூடிய ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் பிரளய கால அம்மனுக்கு வருட தோறும் அக்னி நட்சத்திரம் முடிவடைவதை ஒட்டி வெப்பம் தணிப்பதற்கு 1008 இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். 

இந்த வகையில் இந்த வருடத்திற்கான அக்னி நட்சத்திரமானது கடந்த நான்காம் தேதியில் ஆரம்பித்து சுமார் 25 நாட்களாக அக்னி வெப்பமானது காணப்பட்டு வருகிறது. 

 

இந்த அக்னி வெப்பத்தை தணிப்பதற்கும், அக்னி நட்சத்திரம் முடிவடைவதை ஒட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பிரளய கால அம்மனுக்கு 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பிரளய கால அம்மனுக்கு தீப தூபாராதனைகள் காட்டப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

VIDEOS

Recommended