கும்முடிபூண்டி கரும்பு குப்பம் அருள் மிகு ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
L.குமார்
UPDATED: May 19, 2024, 6:52:11 AM
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்முடிபூண்டி கரும்பு குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
ஸ்ரீமான் சதீசன் ராமானுஜ தாசன் பட்டாச்சாரியார் தலைமையில் யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் சீனிவாச பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கோவில் நிர்வாகத்தினர் சிறப்பித்தனர்.
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன் ஆகியோர் உடன் இருந்தனர்.