ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தில் குடல் புடுங்கி திருவிழா
சண்முகம்
UPDATED: May 10, 2024, 5:35:13 AM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவாளக்குடி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஐந்தாம் தேதி காப்பு கட்டுதல் தொடங்கி நாள்தோறும் விநாயகர் முருகர் மற்றும் மூலவர் அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வரும் நிலையில் ஏழாம் தேதி அன்று மயான கொள்ளை நடைபெற்றது
இதனை தொடர்ந்து தீமிதி திருவிழா மற்றும் வீதி உலா நடைபெற்றது வியாழக்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் சுடுகாட்டில் அங்காள பரமேஸ்வரியை தத்ரூபமாக பொம்மை செய்து மேளதாளம் வழங்க அம்மனுக்கு முன் கோழி பலி கொடுக்கப்பட்டது
இதனை அடுத்து கோழியின் உடலில் உள்ள குடலை அங்காள பரமேஸ்வரி வேடமிட்ட செந்தில் தத்துவமாக பிடுங்கி பக்தர்கள் முன் காண்பித்து பின்னர் கோயில் வரை எடுத்து வந்ததும் அங்குள்ள பக்தர்கள் அங்காள பரமேஸ்வரி தத்துவமாக நேரில் பார்த்தது போல் காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து அங்குள்ள பக்தர்கள் சிலர் சாமி ஆடியதும் இதனால் அனைத்து பக்தர்களும் அங்காள பரமேஸ்வரி என கோஷம் எழுப்பினர்.