• முகப்பு
  • ஆன்மீகம்
  • தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு.

தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு.

செந்தில் முருகன்

UPDATED: May 29, 2024, 11:26:51 AM

District news

தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Mayiladuthurai district news

இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்ல, மூன்று யானைகள், ஒட்டகம், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.

Latest District News

ஞானபிரகாசர் பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு நாளை இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended