மன்னார் மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 6, 2024, 5:58:46 PM

மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பல வருடங்களின் பின்னர் முதல் முறையாக மன்னார் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  தலைமையில் இடம் பெற்றது.

இஹ்ஸானிய்யா அஹதிய்யா பாடசாலையின் ஆசிரியர் அஷ்ஷேய்ஹ் வை.திக்றுல்லாஹ்வின் கிராத்துடன் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு  சனிக்கிழமை ஆரம்பமானது . இச் செயலமர்வில் மன்னார் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எச்.ஹஸ்பி, அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் தேசிய பிரதித் தலைவர் பாரூக் பதீன் மத்திய சம்மேளனத்தின் தகவல் தொழில்நுட்ப குழு உறுப்பினரும், சிலாபம் கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரியர் ஆலோசகரும், வளவாளருமான அஷ்ஷேய்ஹ் எம்.ஐ.தஹ்லான் (மதனி),

வட மாகாண ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேய்ஹ் ஏ.எம் சாகிர் ஆசிரியர் ,

பொருளாளர் எம்.எம்.முனாபில் ஆசிரியர் ,

 யாழ் மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்

 அஷ்ஷேய்ஹ் எஸ்.எம்.நிஸ்தாக் ,

மன்னார் மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எச். ஹாபிஸா,

அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர் ,ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 செயலமர்வு நிறைவடைந்த பின்னர் கலந்துரையாடி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

ஞாயிறு அஹதிய்யா அறநெறி பாடசாலைகள் நடைபெறும் போது காலை 7.30 மணி முதல் பி .ப 12.30மணி வரை பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுவதை தடை செய்தல் 

பிரத்தியேக வகுப்புகள் நடாத்துவோருடன் சுமுகமான முறையில் கலந்துரையாடல்.

 அஹதிய்யா நடாத்துவதற்கு அரச பாடசாலைகளின் அனுமதிக்காக கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி உத்தியோக பூர்வமான அனுமதிகளை பெற்றுத் தரல் மேலும் முடிவுகளை சுற்று நிரூபமாகவும் வெளியிடல் 

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அஹதிய்யா பாடசாலைகளின் மாவட்ட சம்மேளனத்தின் நிருவாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்குதல்

ஒவ்வொரு அஹதிய்யா பாடசாலைகளுக்கும் காகிதாதிகள், அலுமாரிகள் , போன்ற தேவையான உதவிகளை பெற்றுத்தரல்

 அஹதிய்யா அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான மாதிரி இடாப்பு , சம்பவத் திரட்டு புத்தகம் ஏனைய பதிவேடுகளை வழங்குதல் 

அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு தொடர் வழிகாட்டல் செயலமர்வு, உளவளத்துணை ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல் 

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரம் சித்தி அடையாத மாணவர்கள், அறநெறி,அஹதிய்யா மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்தல். 

தர்மாச்சாரிய சான்றிதழ் பரீட்சையில் சித்தி அடைந்த முஸ்லிம் (அஹதிய்யா ),இந்து, கிறித்தவ அறநெறி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்க அரச உயர்மட்டக்குழுவுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தல்

 மாவட்ட Policy Mekking மேற்கொள்ளும் போது எமது அஹதிய்யாவின் கோரிக்கைகளையும் உள்ளடக்க வழி செய்தல் 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் பல்லின மக்கள் வாழும் மாவட்டத்தில் உங்கள் பணிகளின் மூலம் சிறந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம் அனைவரினதும் 

கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளேன் இங்கு எடுக்கப் பட்ட விடயங்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு விரைவாக அமுல் படுத்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார் . அனைவரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். கலந்துரையாடல் ஆசிரியர் எச்.எம்.அப்ராஸ் அவர்களின் நன்றியுடன் நிறைவு பெற்றது.

 

( தகவல்

பாரூக் பதீன் (ஆசிரியர் )

தேசிய பிரதித் தலைவர்

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனம்



VIDEOS

Recommended