• முகப்பு
  • ஆன்மீகம்
  • அருள்மிகு திரு நாகவல்லி மாரியம்மன் அருள்மிகு புற்றிடம் கொண்ட அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

அருள்மிகு திரு நாகவல்லி மாரியம்மன் அருள்மிகு புற்றிடம் கொண்ட அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

ஜெயராமன்

UPDATED: Jul 10, 2024, 8:46:04 AM

திருவாரூர் ராமகே சாலை திருவள்ளுவர் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரு நாகவல்லி மாரியம்மன் அருள்மிகு புற்றிடம் கொண்ட அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சேகர் சுவாமிகள் ஏற்பாட்டில் மோகனசுந்தரம் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

முன்னதாக யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க மிக விமர்சையாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கெடுத்து அம்மனை வழிபட்டு சென்றனர்

சேகர் சாமியின் உறவினர்கள் மற்றும் திருவாரூர் நகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended