- முகப்பு
- புதுச்சேரி
- நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி திராவிடர் கழகம் இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகன பரப்பரை பயணம்.
நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி திராவிடர் கழகம் இளைஞரணி சார்பில் இரு சக்கர வாகன பரப்பரை பயணம்.
சக்திவேல்
UPDATED: Jul 11, 2024, 6:46:44 PM
திராவிடர் கழகம்
புதுச்சேரி திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் "நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி"புதுச்சேரி தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இருசக்கர வாகன பரப்புர பயணம் சாரம் ஜீவா சிலை சதுக்கத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பேரணியை புதுச்சேரி மாநில திராவிட கழக தலைவர் சிவ. வீரமணி மற்றும் திமுக மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
Latest Puducherry News in Tamil
மூன்று குழுவாக புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வருகின்ற 15-ம் தேதி சேலம் சென்றடைகிறது.
இருசக்கர வாகன பரப்புரை பேரணியில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி உள்ளிட்ட அரசியல் இயக்க தலைவர்கள், மாணவரணி பொறுப்பாளர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.