• முகப்பு
  • போக்சோ
  • சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது.

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது.

சுந்தர்

UPDATED: May 23, 2024, 8:53:02 AM

சென்னை மதுரவாயல் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகள், இளம்பெண்களை குறி வைத்து மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து பாலியல் சீண்டலில் அடிக்கடி ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. 

இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் தனித்தனியாக நடந்து சென்ற இரண்டு சிறுமிகளிடம் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் ஐயப்பன்தாங்கல் பரணிபுத்தூர் மெயின்ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மகேஷ்(22). என்பவர் தனியாக சென்ற பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார், மதுரவாயல் அனைத்து மகளிர் போலீசில் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended