பேச்சு வார்த்தைக்கு ஆட்சியர் அழைப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆத்திரம், வெளிநடப்பு செய்த கிராம விவசாயிகள்.
செ.சீனிவாசன்
UPDATED: May 6, 2024, 6:22:21 PM
நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. ஆலை ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் சேர்ந்த விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்தையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டு கடந்த 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.
இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது
இந்த நிலையில் பிள்ளைபணக்குடி கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தில் DSP பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிவிரைவு படை போலிசார் குவிந்ததால் போராட்டக்காரர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு கோட்டாட்சியர் அரங்கநாதன் போராட்டக்காரர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறி 15பேர் வர அழைப்பு விடுத்தார். சுமூக தீவு ஏற்படும் என நம்பிக்கையோடு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர் பேச்சு வார்த்தை அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 07-05-2024
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சி பி சி எல் பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மட்டுமே அங்கு பேச்சு வார்த்தைகள் இருந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஆறு நாளாக தங்களை வருத்திக்கொண்டு உண்ணாமல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு எடுப்பார் என நம்பிக்கையோடு வந்த எங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதால் எனவும் தங்களது போராட்டம் தீவிரமடைவதாக கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.