• முகப்பு
  • விவசாயம்
  • விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.

JK

UPDATED: May 29, 2024, 11:47:57 AM

Agriculture Loans Waiver

விவசாய விலைப் பொருட்ளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதிய வழங்க வேண்டும்.

மிக முக்கியமாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடகா அரசு மாதந்தோறும் திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும்.

Farmers Protest Agriculture Loans waive off 

மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் டெல்லி சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மோடிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வாரணாசி செல்லை முயன்ற போது அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சென்னையில் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது திருச்சியில் காவல்துறையினர் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்தனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்ள கார்த்திகைக்கு தீபம் ஏற்றும் டவரின் மீது ஏறி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamilnadu Protest -  Agriculture Loans waive off 

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு டவர் மேலிருந்து விவசாயிகள் கீழே இறங்கினர்.

இதன் காரணத்தால் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி : அய்யாக்கண்ணு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்,  மாநில தலைவர்.

 

VIDEOS

Recommended