• முகப்பு
  • விவசாயம்
  • புவனகிரி அருகே சேதமடைந்த நெல் பயிருக்கு பயிர் காப்பீடு நிவாரணம் வழங்க கோரிக்கை 

புவனகிரி அருகே சேதமடைந்த நெல் பயிருக்கு பயிர் காப்பீடு நிவாரணம் வழங்க கோரிக்கை 

சண்முகம்

UPDATED: Jun 12, 2024, 12:35:35 PM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு பு.கொளக்குடி, மருதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது விவசாயிகள் பலர் நவரைப்பட்ட நெல் சாகுபடி செய்துள்னர். அவை இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இவ்வாறான நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றினால் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து முளைப்பு ஏற்பட்டு வருகின்றன.

இந்த பயிர்களை ஆய்வு செய்யவோ, கணக்கீடு பண்ணவோ வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் இதுவரை எட்டிக் கட பார்க்கவில்லை. கணக்கெடுப்பும் செய்யவில்லை என விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு முறை பயிர் காப்பீடு செய்ய சொல்லும் வேளாண்மை துறை பயிர் காப்பீட்டுக்கான நிவாரணம் வழங்கும்போது மட்டும் வாயை மூடி மௌனம் காத்து வருகிறது. தற்போது இப்பகுதிகளில் பல விவசாயிகளுக்கு நெற்பயிர சாய்ந்து முளைப்பு ஏற்பட்டு வருகிறது.

இதற்கு பயிர் காப்பீட்டுக்கான நிவாரண வழங்க வேண்டும், மேலும் தற்போது அறுவடை இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும், நெல் அறுவடை இயந்திரத்திற்கான வாடகையை அரசே ஏற்க வேண்டும்.

அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை தற்போதைய நிலையில் செலவு செய்து விட்ட நிலையில் பயிர் காப்பீட்டுக்கான நிவாரணம் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்வது போன்றவை தான் விவசாயிகளை ஓரளவவாது காப்பாற்றும் என இப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended