• முகப்பு
  • விவசாயம்
  • குறை வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உதவிகள்

குறை வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உதவிகள்

ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Aug 11, 2024, 5:46:29 PM

பொருளாதார அபிவிருத்தி நிறுவகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கும் சுயதொழிற் பயிற்சி ஒன்றிணையும் அதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியது.

மேற்படி வலய மட்டத்தில் நடத்தப்படும்  ஒரு நிகழ்வு கம்பளை, தொழுவ பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் இடம் பெற்றது.

இதற்கு தொலுவ பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த குறை வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்நிகழ்வில் பயனடைந்தனர்.

கோழி வளர்ப்பு, பயன் தரக் கூடிய மரங்களை நடுதல் போன்ற துறைகளில் பயிற்சிகளும் அதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இவ் ஆரம்ப வைபவத்தில் அதற்கான மரக்கன்றுகள்,கோழிக்குஞ்சுகள் உற்பட இதர வளங்களும் கையளிக்கப்பட்டன.  

தொழுவ பிரதேச செயலாளர் யமுனா தயாரத்ன, வலய கல்விப் பணிப்பாளர் நிகால் அழககோன், 'ரெடா' (REDA) நிறுவனப் உதவிப் பணிப்பாளர் என். டப்ளியூ. இலட்சுமி உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended