சின்னமனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் முன்னேற்பாடுகள் தீவிரம்.
ராஜா
UPDATED: Jun 8, 2024, 7:49:37 PM
தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் முதல் போக நெல் சாகுபடிக்கு தயாராகும் நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. முதல் போக நெல் சாகுபடி நடவு பணிகள் நடந்து வருகின்றன.
முல்லைப் பெரியாற்றிலிருந்து ஜூன் 1 தேதி 300 கன அடி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து முதல் போக சாகுபடிக்கு தேவையான நெல் மணிகளை நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல் சாகுபடிக்கு ஆர் என் ஆர் சின்ன ரகம், கொண்ட முடி நெல்மணி விதைகளை தூவி நாற்றங்கால் பாவி உள்ளனர்.
குறிப்பாக நடவு பணிக்கு முன்பு காளைமாடுகளை கொண்டு உழவு பணிகள் செய்து பின்னர் விதை நெல்களை பயிரிட்டு நெல்நாற்று தயார் செய்கின்றனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 09.06.2024
பின்னர் விவசாயிகள் கூறுகையில் விதைகளை 30 நாட்கள் நாற்று பாவி நடவு செய்தால் 120 நாளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் என்று கூறினார்.