• முகப்பு
  • கல்வி
  • திருவள்ளூரில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சென்றாண்டை விட குறைவு.

திருவள்ளூரில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சென்றாண்டை விட குறைவு.

சுரேஷ்பாபு

UPDATED: May 10, 2024, 11:33:42 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 86.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.

கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 88.80 சதவீதமாக இருந்தது.

இந்த ஆண்டு 2.28 சதவீதம் குறைந்தது.

32511 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 28129 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

அதில் 16320 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13467 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

16191 மாணவிகள் தேர்வு எழுதியதில் 14662 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் 82.52 சதவீதமும் மாணவிகள் 90.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 225 அரசு பள்ளிகளில்  80.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது.

கடந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 22 வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு 35வது இடத்தில் தள்ளப்பட்டது.

அதேபோன்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி விதத்தில் கடந்த ஆண்டு 27 வது இடத்தில் இருந்தது இந்த ஆண்டு 36 வது இடத்தில் தள்ளப்பட்டது.

 

VIDEOS

Recommended