மதுரவாயலில் 2 பிள்ளைகளை தவிக்கவிட்டு பெண் தற்கொலை.
பிரேம்
UPDATED: Apr 18, 2024, 5:29:41 AM
சென்னை, மதுரவாயல் கண்ணன் நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக வசிக்கும் ராஜா என்பவரது மனைவி தேவி (32). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 14 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனர்.
மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் தேவி டெய்லராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய தேவி, வீட்டிலிருந்த பிள்ளைகளை வெளியே சென்று விளையாடுமாறு கூறியுள்ளார்.
பின்னர் கதவை மூடிக்கொண்ட அவர், நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, புடவையால் தூக்கிமாட்டியபடி இறந்த நிலையில் தேவி இருந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து உடனே மதுரவாயல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தேவியின் தற்கொலைக்குக் காரணம் என்ன? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு