• முகப்பு
  • சென்னை
  • கோயம்பேட்டில் பெட்டி பெட்டியாக ஆப்பிள் திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த வியாபாரிகள்.

கோயம்பேட்டில் பெட்டி பெட்டியாக ஆப்பிள் திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த வியாபாரிகள்.

S.முருகன்

UPDATED: Aug 2, 2024, 1:20:51 PM

சென்னை கோயம்பேடு 

கனி அங்காடிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் கனி அங்காடியில் காணும் இடங்களில் எல்லாம் 3 சக்கர சைக்களில் பழப்பெட்டிகளை அங்கியிருக்கும் கூலித்தொழிலாளிகள் எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்த சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட ஒரு நபர், 3 சக்கர சைக்களில் கூலித்தொழிலாளி போல வந்து, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஆப்பிள் பெட்டிகளை திருடிச் சென்றுள்ளார். 

Chennai Crime News

கனி அங்காடியில் ராஜேஸ் என்பவரின் கடையில் ஆள் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட அவர், சிறுக சிறுக 3 சக்கர சைக்கிள் மூலம் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் பெட்டிகளை திருடிச் சென்றார். 

ஆப்பிள் பெட்டிகள் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், யார் அந்த திருடன் என்பதை கண்டறிய, திருடுபோனதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாக இருந்துள்ளனர்.

யாரும் கண்டுபிடிக்கவில்லை என நினைத்த திருடன், மீண்டும் தனது கை வரிசையை காட்ட வந்தபோது, கையும் களவுமாக வியாபாரிகள் மடக்கிப்பிடித்தனர்.

சிசிடிவி காட்சி

மேலும், சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் அவரை கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர், கடலூர் மாவட்டம் கொண்டான் குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், திருடப்பட்ட ஆப்பிள் பெட்டிகளை மீட்டுகும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

 

VIDEOS

Recommended