• முகப்பு
  • சென்னை
  • கல்லூரியில் சேரும் கனவுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

கல்லூரியில் சேரும் கனவுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

நெல்சன் கென்னடி

UPDATED: May 13, 2024, 8:06:39 PM

Train accident 

எண்ணூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது நாசர் இவர் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் இவரது மகன் முஹம்மது நபில்(17) பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக நேற்று காலை தனது இல்லத்தில் இருந்து எண்ணூர் ரயில் நிலையம் வந்து ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்காக நுழைவு படிவம் வாங்குவதற்காக எண்ணூர் ரயில் நிலையம் வந்த நிலையில்

சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக ஆவடி செல்வதற்காக நடைமேடையில் நின்று இருந்த ரயிலில் ஏறி அமர்ந்து இருந்த நிலையில்

உயிர் இழந்தார்

அந்த ரயில் கும்மிடிப்பூண்டி வழித்தடம் பொன்னேரி செல்வதற்காக நின்றிருந்த ரயிலில் தவறுதலாக ஏறி அமர்ந்திருந்த நிலையில் ரயில் புறப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து திடீரென ரயிலில் இருந்து இறங்கியபோது நடைமேடியின் இடைவெளியில் விழுந்து தண்டவாளத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்

மருத்துவமனை

இதனை அடுத்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கல்லூரியில் சேரும் கனவோடு ரயில் ஏற வந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

indraya seithigal tamilnadu , indraya seithigal chennai , news indraya seithigal chennai tamilnadu , today news tamilnadu , இன்றைய செய்திகள் சென்னை ,

VIDEOS

Recommended