• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நாகாத்தம்மன் கோயிலை இடித்த போது பக்தர்கள் சாமியாடியதால் பரபரப்பு.

மதுரவாயல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நாகாத்தம்மன் கோயிலை இடித்த போது பக்தர்கள் சாமியாடியதால் பரபரப்பு.

பிரேம்

UPDATED: Apr 22, 2024, 10:29:48 AM

சென்னை மதுரவாயல் பகுதியில் நாகாத்தம்மன் கோயில் ஒன்று சாலை ஓரம் அமைந்திருந்தது.

இந்தக் கோயில் தனது வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக சாந்தி முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் படி சில நாட்களுக்கு முன்னர் கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.

original/when-the-occupied-nagathamman-temple-was-demolishe

அப்போது கோயிலை இடிக்கப் பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் நேரத்தில் கோயிலை இடிக்க வேண்டாம் என அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

அப்போது அங்கு திரண்டு போராடிய பக்தர்கள் கோயிலை இடிக்க வழக்கு தொடர்ந்த சாந்தி என்பவரது வீடும் நான்கு அடி ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதையும் இடிக்க வேண்டும் என குற்றம் சாட்டி இருந்தனர். 

இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவும் கோயிலை இடிக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் வந்தனர்.

மேலும் கோயிலை இடித்ததுடன் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீட்டின் முன் பகுதியையும் இடித்தனர்.

இதற்கிடையே கோயிலை இடிக்கும் போது அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில பக்தர்கள் பரவசத்துடன் சாமியும் ஆடினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சாமி சிலை உடன் பெண்கள் சிலர் கூடி உச்சநிட்டு அழுதது சலசலப்பை ஏற்படுத்தியது.

 

  • 4

VIDEOS

Recommended