சவிதா கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய கட்டண தொகையை செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் பரபரப்பு.
S.முருகன்
UPDATED: May 31, 2024, 8:45:17 AM
திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் சவீதா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி உள்ளது எம்பிஏ படிக்கக்கூடிய மாணவர்கள் பயிலக்கூடிய இந்த கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி நுழைவாயிலில் நின்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில் தாங்கள் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கல்வி கட்டண தொகையாக ரூ. மூன்று லட்சம் கட்டியதாகவும் மேலும் கல்லூரி நிர்வாகம் கூறியதின் பேரில் அவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணமாகவும், காசோலையாகவும், ஆன்லைனில் பணத்தை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்
தற்போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை கல்வி கட்டண நிலுவை தொகை இருப்பதாகவும் அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் செலுத்தினால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த இரண்டு வாரங்களாக வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதாகவும்
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது கல்வி கட்டன தொகையை செலுத்திய போது பணியில் இருந்தவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்ட நிலையில் தற்போது அதற்கான ரசீதும் வழங்கவில்லை எனவும்
தங்களிடம் கட்டணம் வசூலித்தவர்கள் கல்லூரியை விட்டு நின்று விட்ட நிலையில் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று தங்களையே செலுத்து சொல்வதாகவும் இல்லை என்றால் நிலுவையில் உள்ள தொகையை செலுத்த கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தி வருவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர்
ALSO READ | கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு.
மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் முறைகேடாக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் வகையில் கட்டணத்தை வசூல் செய்து விட்டு அதனை எடுத்து சென்ற ஊழியர்கள் மீது அரசும், கல்லூரி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தங்களது கல்வி பாதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும் என புகார் தெரிவித்தனர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவேற்காடு போலீசார் கல்லூரி நிர்வாக ஊழியர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர் மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத் தொகையை செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.