• முகப்பு
  • சென்னை
  • பூந்தமல்லி அருகே சைக்கிளை ஓட்டியபடி வந்து வீட்டின் முகவரியை மறந்த சிறுவன்

பூந்தமல்லி அருகே சைக்கிளை ஓட்டியபடி வந்து வீட்டின் முகவரியை மறந்த சிறுவன்

சுந்தர்

UPDATED: Apr 24, 2024, 7:00:53 AM

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பஸ் நிலையம் அருகே சைக்கிளில் வந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது வீடு எங்கு உள்ளது என்று தெரியாமல் அங்கும் இங்குமாக சுற்றியபடி இருந்தான்.

இதனை கண்டதும் அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது தாத்தா என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் அவனால் சொல்ல முடியவில்லை

மேலும் அவனது முகவரி எங்கு என்று கேட்டபோதும் சிறுவனால் சொல்ல முடியாததால் சைக்கிளை ஓட்டி சென்றால் அவனது வீட்டிற்கு செல்வான் என சிறிது தூரம் சைக்கிளை அந்த சிறுவன் ஓட்ட அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னால் சென்றனர்.

ஆனால் அந்த சிறுவனுக்கு வீடு இருக்கும் திசை தெரியாததாலும் முகவரியை சொல்ல முடியாததாலும் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சிறுவன் முகவரி குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்த நிலையில் சிறுவனின் முகவரி கிடைக்காததால் ஒருவர் தனது மகனை காணவில்லை என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுவனின் அடையாளத்தை குறித்து கூறியபோது தனது மகன் என அந்த தம்பதியினர் கூறியதையடுத்து பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வர வழைத்து சிறுவனின் பெற்றோரிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

வீட்டிலிருந்து சைக்கிள் ஓட்டியபடி வந்த சிறுவன் வீட்டின் முகவரியை மறந்து சைக்கிளை ஓட்டியபடி வந்து இருந்த நிலையில் போலீசார் சிறுவனை மீட்டு 2 மனி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

  • 6

VIDEOS

Recommended