• முகப்பு
  • சென்னை
  • சென்னை கொருக்குப்பேட்டையில் முன்பகை காரணமாக ரவுடி ஓட"ஓட வெட்டி படுகொலை.

சென்னை கொருக்குப்பேட்டையில் முன்பகை காரணமாக ரவுடி ஓட"ஓட வெட்டி படுகொலை.

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 11, 2024, 10:46:05 AM

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் எ ஸ்வீட் தினேஷ்(24) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பிஸ்கேட் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கஞ்சா வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அடிதடி ஏற்பட்டு சிறை சென்ற நிலையில்  இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து இன்று மாலை கொருக்கப்பேடடை ஏகாம்பரம் தெருவில்  மதுபாரில் ஸ்வீட் தினேஷ் இன்று மது அருந்தி கொண்டு இருந்தான் 

அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த பிஸ்கேட் சந்தோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷே சரமாரியாக வெட்டியுள்ளனர்

இவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தினேஷை துரத்தி துரத்தி வெட்டி விட்டு தப்பியோடிய நிலையில்

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கபட்ட தினேஷ் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையி் அதிக அளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் தினேஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர் .

முன்பகை காரணமாக ரவுடி ஓட ஓட வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended