• முகப்பு
  • சென்னை
  • மழைநீர் வடிகால் பணிகள் : சிமெண்ட், ஜல்லி, கம்பிகளின் தரத்தை பரிசோதித்த எம்எல்ஏ 

மழைநீர் வடிகால் பணிகள் : சிமெண்ட், ஜல்லி, கம்பிகளின் தரத்தை பரிசோதித்த எம்எல்ஏ 

ஆனந்த்

UPDATED: Sep 22, 2024, 10:10:57 AM

சென்னை

சென்னையில் 90 சதவீதத்திற்கும் மேல் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து விட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் விடுபட்டுப்போன சில பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வளசரவாக்கம் 151 வது வார்டில் மழை நீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

அவற்றை மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி நேரில் ஆய்வு செய்தார்.உடன் மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன், கவுன்சிலர்கள் சங்கர் கணேஸ்,வி.வி.கிரிதரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பானுகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது மழை நீர் வடிகால் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் சிமெண்ட் மற்றும் ஜல்லிகளின் தரத்தை தனது கையால் எடுத்து பரிசோதித்து அதிரடியாக அவர் ஆய்வு செய்தார்.

மேலும் மழைநீர் வடிகால்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவற்றில் ஏதேனும் தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் அவர் அறிவுறுத்தினார்.

 

VIDEOS

Recommended