அரசு நிலம் ஆக்கிரமிப்பால் அரசு திட்டம் செயல்படுத்த இடமில்லை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்த பூந்தமல்லி எம்எல்ஏ.
சுந்தர்
UPDATED: Jun 19, 2024, 11:41:54 AM
பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த இந்த முகாமில் பூந்தமல்லி, திருமழிசை, நேமம், வானகரம் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 571 பேர் மனு வழங்கினர்.
இதில் 150 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. 53 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 368 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இறுதி நாளான இன்று உடனடி தீர்வு காணப்பட்ட 150 மனுதாரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார்.
பூந்தமல்லி எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். உடன் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேசுகையில் :
ஜமாபந்தியில் எம்எல்ஏ என்ற முறையில் அரசு அதிகாரிகளிடம் நான் கோரிக்கை வைக்கிறேன் பூந்தமல்லியில் அரசு நிலங்கள் பல ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. குளம், குட்டைகளை மூடி கட்டிடம், மண்டபம் கட்டி சிலர் வாடைக்கு விட்டுள்ளனர்.
அதனை மீட்க வேண்டும் குடியிருப்புகளாக இருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசித்து எடுத்து கொள்ளலாம் அரசு நிலம் இல்லாததால் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை, சமூதாய கூடம் உள்ளிட்ட அரசு திட்டங்களை செயல்படுத்த இடமில்லை. பூந்தமல்லியில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டால் இடமில்லாமல் திருவள்ளூரில் கொடுக்கின்றனர்.
அரசு திட்டங்களை செயல்படுத்த தனியார் நிலத்தை வாங்க வேண்டுமானால் ஏக்கருக்கு ரூ.6 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இருக்கும் இடத்தை பாதிகாக்க வேண்டும்.
வருவாய் துறை அதிகாரிகள் நேர்மையாக இருந்து பூந்தமல்லியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்