• முகப்பு
  • சென்னை
  • திருவொற்றியூரில் முன் விரோத காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளியை ஆட்டோவில் கடத்தி கொலை.

திருவொற்றியூரில் முன் விரோத காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளியை ஆட்டோவில் கடத்தி கொலை.

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 11, 2024, 9:46:51 AM

சென்னை திருவொற்றியூர் அஞ்சுகம் நகரில் வசித்து வருபவர் ராசையா(27) இவர் திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் பல்வேறு காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி 

மேலும் திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருபவர் முரளி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராசையா முரளியிடம் மாமுல் கேட்டு தர மறுத்ததால் முரளியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது, 

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் முரளி மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அஜாக்ஸ் பேருந்து நிலையம் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையில் ரவுடி ராசையா நடந்து சென்ற போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் முரளி தனது நண்பருடன் ராசையாவை ஆட்டோவில் கடத்திச் சென்று அருகே உள்ள ராயல் என்ஃபீல்டு கம்பெனி அருகே வைத்து மடக்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலை, கழுத்து, முதுகு என சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து நால்வரும் தப்பிச்சென்றனர் ,

மேலும் அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே அங்கு வந்து திருவொற்றியூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராசையாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது வரும் வழியிலேயே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் 

மேலும் ராசையாவை கொலை செய்து தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் முரளி மற்றும் அவனது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாமுல் கேட்டு தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததா இல்லை வேறு ஏதும் காரணமா என்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended