• முகப்பு
  • சென்னை
  • அண்ணன் மீது உள்ள பகையால் தம்பியை வெட்டி கொன்ற ரவுடிகள் ஐந்து பேர் கைது.

அண்ணன் மீது உள்ள பகையால் தம்பியை வெட்டி கொன்ற ரவுடிகள் ஐந்து பேர் கைது.

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 13, 2024, 3:05:47 PM

சென்னை கொருக்குப்பேட்டை காரியமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா வயது 24 நேற்று முன்தினம் கோபால் ரெட்டி நகரா இருக்கு நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரது சகோதரர் சூரியமூர்த்தி என்ற இன்டிகேட் சூர்யா என்பவருக்கும் ஜெகன் என்ற ஜெகன்நாத் யாதவ் என்பவர் உடன் ஒருவருக்கொருவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தாக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த பகை இருந்த நிலையில் தர்மா நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ஐந்து பேர் கும்பல் தர்மாவிடம் உனது அண்ணன் சூர்யா எங்கே என்று கேட்டுள்ளனர்

இந்நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மா வயிறு பகுதியில் குத்தியுள்ளனர் இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தர்மா அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக ஆர் கே நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையில் ஈடுபட்ட ரவுடிகள் ஜெகன் என்ற ஜெகநாதன் யாதவ் வயது 23 பாலாஜி என்ற முண்டக்கண்ணு பாலாஜி வயது 24 தமிழ்ச்செல்வன் வயது 22 சீனிவாசன் என்ற தாண்டா கேசவன் வயது 19 ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

VIDEOS

Recommended