• முகப்பு
  • சென்னை
  • பொதுமக்களுக்காக ஒன்றாக இணைந்த திமுக-அதிமுக கவுன்சிலர்கள்.

பொதுமக்களுக்காக ஒன்றாக இணைந்த திமுக-அதிமுக கவுன்சிலர்கள்.

சுந்தர்

UPDATED: May 23, 2024, 12:47:39 PM

சென்னை,கோயம்பேடு அருகே நெற்குன்றம் வரலட்சுமி நகர் பகுதியில் பிரபல தனியார் சூப்பர் மார்கெட் உரிமையாளர் 4 கிரவுண்டு காலி மனை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அப்பாஸ் அலி என்பவரை வைத்து அவர் வாங்கியுள்ள இடத்தின் அருகே 144 வது வார்டில் -46 வீடூகள் அதேபோல் 145 வது வார்டில் 29 வீடூகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் ,புறம்போக்கு இடத்தில் வீடூகள் உள்ளது எனவும் அவற்றை அகற்ற வேண்டும் என உயர் நீதீமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம் அந்த பகுதியில் உள்ள வீடூகளை அளவீடூ செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

அதனை இன்று அளவீடூ செய்ய வந்த அரசு அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்

இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த 145 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் மற்றும் 144 வது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் ஆகிய இருவரும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

குறிப்பாக அதிமுக கவுன்சிலர் கூறுகையில் ஒரு தனி நபர் தன்னுடைய இடத்திற்கு வழி வேண்டும் என்பதற்காகவும் ஆதாயம் தேட பொதுநல வழக்காக போட்டுள்ளார்

மேலும் சுய நலத்திற்க்காக போடப்பட்ட வழக்கை வைத்து 70 ஆண்டுகள் மேல் வாழ்ந்து வரும் மக்களை எப்படி அகற்ற முடியும் என சரமாரி கேள்வி எழுப்பினர்.

அதேபோல் திமுக கவுன்சிலர் கூறுகையில் இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு எடுத்து சென்று பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் கூறினார்.

பாதுகாப்பு பணிக்காக அங்கு கோயம்பேடு போலீசார் பணியில் இருந்தனர்.மேலும் பொதுமக்களுடன் இணைந்து இரு கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

திமுக மற்றும் அதிமுக இரு கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்காக களத்தில் இறங்கியதும் இரு எதிர்ரெதிர் கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனையில் ஒன்றாக தலையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அரசு அதிகாரிகள் அளவீடூ செய்யாமல் திரும்பி சென்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended