• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயலில் வாக்குப்பதிவு இயந்திரம் அரை மணி நேரத்திற்கு மேல் பழுதானால் பொதுமக்கள் அவதி.

மதுரவாயலில் வாக்குப்பதிவு இயந்திரம் அரை மணி நேரத்திற்கு மேல் பழுதானால் பொதுமக்கள் அவதி.

சுந்தர்

UPDATED: Apr 19, 2024, 7:52:09 AM

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 88வது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெறாததால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர்.

அதுமட்டுமில்லாமல் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீங்கும் வரை பொதுமக்களுடன் காத்திருந்தார்.

பின்னர் 30நிமிடங்களுக்கு பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் சரிசெய்யபட்ட நிலையில் பொதுமக்களுடன் மதுரவாயல் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி வாக்களித்தார்.

 

  • 11

VIDEOS

Recommended