சர்வதேச அழுத்தம் மற்றும் கடன் பொறியில் இருந்து தப்பும் பொறி முறை ஒன்று அரசுக்கு தேவை.
ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Nov 5, 2024, 6:33:03 AM
சர்வதேச கடன் பொறியில் இருந்து தப்பும் பொறி முறை ஒன்று இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுன (மொட்டு கட்சி) கண்டி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி புத்திக சமரசிங்க தெரிவித்தார்.
கண்டி, செங்கடகல பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
எமக்கு சர்வதேச ரீதியில் கடன் பெற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பெறப்படும் கடனை பயன் உள்ள துறைகளில் முதலிடவேண்டம். அத்துடன் அதனை மீள செலுத்தும் வழிமுறைகளும் இருக்க வேண்டும்.
அதே நேரம் உற்பத்தியை மையமாகக் கொண்ட பொருளாதார திட்டம் ஒன்றும் இருக்க வேண்டும்.
ALSO READ | இன்றைய ராசி பலன்கள் 01-11-2024
தற்போதைய அரசு மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு இன்னும் காலக்கெடு வழங்க வேண்டியுள்ளது. அவர்களது நல்ல திட்டங்கள் இருப்பின் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிின் போது என்.பீ.பீ.ன் பிரசாரங்களால் மக்கள் கவரப்பட்டு வாக்களித்தனர். இன்று பொதுமக்களுக்கு அவை ஏமாற்றத்தை அளித்துள்ளன.
சர்வதேச அழுத்தங்களுக்கு எமது நாடு உற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இலங்கை அதிகம் உள்ளதைக் காணலாம். எமது வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள், ஊடக வியலாளர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் போன்றவர்களுக்கு சமூகத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சக்தி அதிகம் உண்டு.
இருப்பினும் அவர்களில் ஒரு பகுதியினரை சர்வதேசம் நாடுகள் சில தந்திரமான முறையில் தமது கையாட்களாக மாற்றி உள்ளன. இது பற்றி அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர். இதனை மாற்றி அமைப்பது இலகுவான காரியமல்ல. இருப்பினும் பொதுமக்கள் இது பற்றி விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.