• முகப்பு
  • இலங்கை
  • யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உமாசந்திரா பிரகாஷ் வாக்காளர்களுடன் பேசுகின்றார்

யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உமாசந்திரா பிரகாஷ் வாக்காளர்களுடன் பேசுகின்றார்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Nov 4, 2024, 11:57:10 AM

அன்புக்குரிய வாக்காளர்களே!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை தூய்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

தற்போது ஆட்சியியில் உள்ள அரசாங்கத்தில் சமநிலையான பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்திவப்படுத்தும் அதேவேளை, பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அதிசிறந்த எதிர் காலத்தை பெருமையுடன்  உரிமை கோரும் உங்களுக்காக, குறைகளற்ற தலைமைத்துவத்தை வழங்குவதற்காக, போலி நடிப்பற்ற முறையில் உங்களுக்காக சேவையாற்றுவதற்காக உமாச்சந்திரா பிரகாஷ் ஆகிய நான் முன் வந்துள்ளளேன். 

original/img-20241023-wa0060_copy_210x210_1
சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான நான், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியைப் நிறைவு செய்துள்ளேன். 2001 ஆண்டு முதல் சக்தி வானொலி, வீரகேசரிப் பத்திரிகை மற்றும் சக்தி தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பணியாற்றியுள்ளேன். 

பெட்டகம்', 'நல்லூர் கந்தசாமி பெருங்கோயில்', Discover Jaffna மற்றும் அணிகலன் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தால் இலக்கியத்துறைக்காக கலைச்சுடர் விருதையும் பெற்றுக் கொண்டுள்ளேன். 

எனது அரசியல் செயற்பாடுகளில் முக்கிய திருப்புமுனையாக உங்களுக்கும், தேசத்துக்கும் சேவையாற்றுவதற்காக, உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் உங்கள் ஆதரவை நாடிநிற்கின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான் தெரிவு செய்யப்பட்டதும், இலங்கை அரசியல் நீரோட்டத்தில் மேல்நிலைக்கு வந்துள்ள கறைபடியாத அரசியல் பிரதிநிதியாக நான் நிறைவேற்றவுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன். 

original/marikkara-ad_copy_400x218_1
1.​ பாராளுமன்றம் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி மூலம் மாவட்ட அபிவிருத்திகளை தடையின்றி மேற்கொள்ளல். 

2.​ அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிக்கான ஆண்டுக் கணக்கறிக்கைகள் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல். 

3.​ மாவட்ட அபிவிருத்தியில் ஆர்வம் கொண்ட புத்திஜீவிகளை ஒன்றுணைத்து, தனிப்பட்டமுறையில் அவர்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ​நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் / திட்டங்களை நடைமுறைப்படுத்தல். 

original/1729599186090_copy_432x540
4.​ மெட்ரோ பொலிஸ் திட்டத்தின் கீழ் கொழும்பு மாநகரம் அபிவிருத்தி செய்யப்படுவது தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளார்கள். அத்திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களையும் அனுகூலங்களையும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஏற்படுத்தல். 

5. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல்.

6- போதைப் பொருள் பாவனைக்கு எதிராக குரல் கொடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியின் நலனுக்காக பாடுபடல்.

original/img-20241031-wa0184_copy_349x496
7- பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடுதல், பதின்ம வயது திருமணங்கள், பதின்ம வயது குழந்தைப்பேறு தொடர்பில் அதிக சிரத்தையுடன் உழைத்தல்.

8- அரசியிலில் பெண்களின் வகிபாகத்தை அதிகரித்தல்.

9- ஊழலற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான உத்தரவாதம்.

10- யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் உரிமையோடு நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குதல். 

எதிர்காலச் சந்ததியினரின் சேமநலத்துக்காக எப்பொழுதும், அனைவரினதும், பொதுவான நன்மை கருதி நாம் சிந்தித்துச் செயற்படுவோம்.

original/img-20241018-wa0351_copy_640x640_1
எனது தொடரும் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமாக, அசையாத நம்பிக்கையுடன் என்னுடன் கைகோருங்கள்! 

இப்படிக்கு 

உமாச்சந்திரா பிரகாஷ்

ஐக்கிய மக்கள் சக்தி

 

VIDEOS

Recommended