புரவலர் ஹாசிம் ஓமரின் தொடரும் கல்விக்கான கரங்கள்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 4, 2024, 4:32:24 AM
கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஒப்ப கல்விக்குக்கு கல்விக்கு உதவி செய்பவர்களுக்கும் அதைவிட மேலான சிறப்புகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகையில் இலங்கையில் கலைஞர்களை ஊக்குவித்து வந்த புரவலர் ஹாஷிம் ஓமர் தன்னுடைய தூர நோக்கின் பலனாக வறிய நிலையில் கல்வியை தொடருகின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.
அந்த வகையில் ஆறாவது கட்ட மடிக்கணினி வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஹாஷிம் ஓமரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் தமிழ் பத்திரிகை துறையின் முன்னோடி வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீ கஜன் கலந்து கொண்டு மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
பொதுவாக இவ்வாறான நிகழ்வுகள் மண்டபங்களில் நடத்தப்பட்டு பெரும் எண் ணிக்கையிலான மக்களை அழைத்து இடம் பெறுவது வழமையாகும்.
ஹாசிம் உமர் பவுண்டேஷன் இதற்கு மாற்றமாக கணினிகளை பெறுபவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்து இதனது பெறு மதியை வலியுறுத்தி அவர்களுக்கு வழங்கி வருவதானது ஒரு சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு கட்டத்திலும் தலா ஐந்து மடிக்கணினிகள் வீதம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு நடுவர் குலாமை வைத்து மாணவர்களுடைய தகுதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையின் மாலா பாகங்களிலும் வாழுகின்ற மூவின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்கு இவை வழங்கப்படுவதானது இன்னும் சிறப்பான ஒரு அம்சமாகும்.
நேற்றைய இந்த சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் செய்தி பிரிவின் முகாமையாளர் சித்திக் எம் ஹனிபா, சமூக ஜோதி எம் எம் ரபிக். கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சபார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சிகளை இலக்கியவாதி ராதா மேத்தா தொகுத்து வழங்கினார்.