மக்களின் பிரச்சினையை தீர்ப்பது தனது குறிக்கோள் என்கின்றார் - டக்ளஸ் தேவானந்தா
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Nov 5, 2024, 5:08:29 AM
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அவிசாவளை பிரச்சார அவிசாவளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா காணொளி மூலம் யாழில் இருந்து அவ்மக்களுக்கு கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார்.
இதில் குறிப்பாக மக்கள் அனுபவிக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க தன்னாலான முழு முயற்சிகளையும் எடுப்பேன் என்றும் , தமது கொள்கைகளை தெளிவுபடுத்தியும் இருந்தார்.
இக்கூட்டத்தில் கொழும்பு மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சஞ்சீவன், கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் செ . இராஜேந்திரன், ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் ஊடக செயலாளரும் வேட்பாளருமான நெல்சன் சுசில் எதிரிசிங்க, வேட்பாளர் தர்ஷக சர்மா அவிசாவளை தொகுதி அமைப்பாளரும் வேட்பாளருமான க. உதயசந்திரன், வேட்பாளர்களான ஜேசங்கர்,ஹூசைன் காதர், றாபி முகமட், ஞானமூர்த்தி மற்றும் சிரோமிக்கா கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இக்கூட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.