சகல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுத்த ஜீவன் தொண்டமான்
ஊடக பிரிவு
UPDATED: Dec 3, 2024, 6:32:13 AM
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்க (Browns Plantation) சிரேஷ்ட முகாமையாளர் W. ரிச்சர்ஸ்டன் ஆகிய இருவருக்குமான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்கத்தின் (Browns Plantation) கீழ் இயங்கும் சமர்ஹில், எஸ்கடேல், கொங்கோடியா, அல்மா ஆகிய தோட்டங்களில் நிலவிவந்த பல்வேறு தொழில் பிணக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலில் தொழிலாளாளர்களுக்கு சாதகமான முறையில் அனைத்து விடயங்களையும் தீர்த்து வைப்பதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறாத வகையில் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்க (Browns Plantation) சிரேஷ்ட முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நிலவிவந்த சீரற்ற காலநிலை மாற்றங்களால், நுவரெலியா - சமர்ஹில், எஸ்கடேல், அல்மா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களால் மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான காணிகளை விடுவித்து தருவதாகவும் ஏகமனதாக உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி குறித்த தோட்டப்பகுதிகளில் தொழில்களை எதிர்பார்த்திருக்கும் படித்த இளைஞர் யுவதிகளுக்கான சுத்தொழில் உட்பட பல்வேறு வகையிலான தொழில் வாய்ப்புகளை உறுவாக்கித் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் சிரேஷ்ட முகாமையாளர் தெரிவித்துக்கொண்டனர்.
ஜீவன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா இ.தொ.கா காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பிரவுன்ஸ் பெருந்தோட்டயாக்க (Browns Plantation) சிரேஷ்ட முகாமையாளர் W. ரிச்சர்ஸ்டன், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மானில காரியாலய இயக்குனர் ராஜாராம், ராகலை பிராந்திய காரியாலய இயக்குனர் காசிராஜ், உடப்புஸ்ஸலாவ காரியாலய மாவட்ட இயக்குனர் குணசீலன் உட்பட்ட தோட்ட மக்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.