இலங்கை சந்தையில் தேங்காயின் விலை 150 முதல் 200 வரை
கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Dec 2, 2024, 4:50:57 PM
தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தற்போது சந்தையில் தேங்காய்க்கான விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
தேங்காய் விலையக் கூடிய இடங்களில் உள்ள உள்ளூர் சந்தைகளில் பெரிய தேங்காய் ஒன்று150 ரூபா அளவில் விற்கப்படுவதுடன் சில நகரப் புறங் களில் 150 முதல் 200 ரூபா வரை விலை ஏற்றம் காணப்படுகிறது.
அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் போக்குவரததுத் தடைகள் காரணமாக போதியளவு தேங்காய் சந்தைக்ku வந்து சேரவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அதே நேரம் இயல்பாகவே தேங்காய்களின் உற்பத்தி தற்போது குறைந்த நிலையிலும் உள்ளது.
அபிவிருத்திப் பணிகள் காரணமாக தென்னை மரங்கள் வெட்டப்படுவதும் அதிகரித்துள்ளது. அத்துடன் சிறிய தென்னந் தோட்டங்களில் எது வித பராமரிப்பு பணிகளும் இடம் பெறாத காரணத்தால் உற்பத்தியில் வீழ்ச்சி காணப்படுவதாக விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில இடங்களில் தேங்காய்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். கண்டிப்பகுதியில் சராசரி 130 ரூபாவிற்கும் 150 ரூபாவிற்கும் இடையில் விலை காணப்படுகிறது.