கண்டிப் பகுதியில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

ஜே. எம்.. ஹாபீஸ்

UPDATED: Dec 2, 2024, 4:42:19 PM

நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக கரையோரப் பகு திகளில் இருந்து வரும் கடல் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலைகளும் அதிகரித்துள்ளன. 

அதே நேரம் உள்ளூர் நன்னீர் மீன் வகைகளுக்கும் தட்டுப்பாடு காணப்படுகிறது. 

மீனவர்கள் கடலுக்கு செல்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் போக்கு வரத்துப் பிரச்சினைகள் காரணமாக மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

அதிகமானவர்கள் கோழி இறைச்சி  மற்றும் முட்டை போன்றவற்றையே கண்டிப் பகுதியில் கூடுதலாக நுகர்வதாகத் தெரிய வருகிறது.

 

VIDEOS

Recommended