ரில்வின் சில்வாவின் 13 பற்றிய கருத்து வாக்களித்த தமிழ் மக்கள் அதிர்ச்சியில்- சர்வதேச இந்து மத பீட செயலாளர் பாபு சர்மா தெரிவிப்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Dec 3, 2024, 11:16:32 AM
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜனத விமுக்தி பெரமுனவின் செயலாளர் ரில்வின் சில்வா புதிய அரசியலமைப்பு கொண்டு வந்ததன் பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்படும். அதேவேளை மாகாணசபை முறமையும் இல்லாமலாக்கப்படும். என்ற செய்தியை கேட்டு வாக்களித்த தமிழ் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு நாட்டில் ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமான நிலையை கொண்டுவருவதற்கான ஒரு அடிப்படை ஒப்பந்தமாக கருதப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் வந்த அரசுகள் அந்த 13னை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் பல தடங்கல்களை ஏற்படுத்தியதன் காரணமாகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் என்பன வழங்ப்படவே இல்லை இந்த நிலையில் ரில்வின் சில்வா அவர்கள் 13வது திருத்தச்சட்டத்தின்படியும் மாகாணசபை முறமையின்படியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதும் அவரது தவறான வாதம் ஆகும்.
அரசு நடைமுறைப்படுத்த முடியாததன் காரணமாக பின்னடைவை சந்தித்தது தான் உண்மை. முழுமையாக 13யை அமுல்படுத்தியிருந்தால் நிச்சயமாக முழு தமிழ் மக்களும் அதனை பாராட்டி அதேவேளை இலங்கை நாடு இந்த பொருளாதார சீரழிவில் இருந்து நிச்சயம் மேம்படும் என்பதில் ஐயமில்லை வடக்கு மக்கள் இந்த ஜனத விமுக்தி பெரமுனவிற்கு தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் வாக்களித்தார்கள்.
ஆனால் செயலாளர் அவர்களின் கருத்து வாக்களித்த வடக்கு மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என பாபு சர்மா தெரிவித்துள்ளார்.