• முகப்பு
  • இலங்கை
  • ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு கட்டணம் இன்றி இலவச சுற்றுலா வீசா நீடிப்பு

ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு கட்டணம் இன்றி இலவச சுற்றுலா வீசா நீடிப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Apr 11, 2024, 5:37:55 PM

இலக்கம் 23/1885/602/023 மற்றம் 2023.10.24 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் சுற்றுலாக் கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி  நிகழ்ச்சித்திட்டமாக 2024.03.31 ஆம் திகதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கட்டணம் இன்றி இலவச வீசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள், சேவைகள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசமாக கட்டணம் இன்றி வீசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Also Read : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி புதுச்சேரியின் வேட்பாளர்கள் பட்டியல்

 2024.03.31 ஆம் திகதி வரை கட்டணம் இன்றி வீசாவை வழங்குவதற்கு / விநியோகிப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயம் இலத்திரனியல் பயண அனுமதிக்காக (ETA) விண்ணப்பித்தல் வேண்டும்.

 கட்டணம் இன்றி வழங்கப்படும் இந்த இலத்திரனியல் பயண அனுமதியின் (ETA) செல்லுபடி காலம் 30 நாட்களாகும். இலங்கைக்கு முதற் தடவையாக வருகைத்தரும் திகதியிலிருந்து இருமுறை நுழைவுக்கான அனுமதி வழங்கப்படும்.

Also Read : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாளை மைத்திரிபால சிறிசேன விசாரணை

இராஜதந்திர, உத்தியோகபூர்வ, சேவைகள் அல்லது அரச அலுவல்களுக்கான கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களின் வீசா விலக்களிப்புக்காக ஏற்கனவே இருதரப்பு பரஸ்பர உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள நாடுளின் (சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து) பிரஜைகளும் ஏற்கனவே இணங்கியுள்ள  விடுவிப்புக்காலத்தை அனுபவிக்க முடியும்.

விண்ணப்பதாரியினால் பெற்றுக்கொள்ளப்படும் இந்த இலவச இலத்திரனியல் பயண அனுமதியின் (ETA)செல்லுபடி காலம் 180 நாட்களாக இருந்த  போதிலும்  கட்டணம் இன்றிய இந்த விசேட வீசா முறையின் கீழ் வீசாவைப் பெற்றுக்கொள்ள  2024.03.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அவர் இலங்கைக்கு வருகைத்தரல் வேண்டும். அதன் பின்னர் இலங்கையின் இறங்குதுறை ஒன்றினூடாக நுழையும்  போது  அல்லது இணைய வழியில் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA)விண்ணப்பித்து ஏற்புடைய கட்டணங்களை செலுத்தி  வீசாவைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

Also Read : செய்திகளை உண்மைத் தன்மையுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள 24 மணி நேர தி கிரேட் இந்தியா ஸ்ரீ லங்கா சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

30 நாட்களுக்கு மேல்  இலங்கையில் தங்கியிருப்பதற்கு உத்தேசிக்கும் ஆட்கள்  ஏற்புடைய வீசாக் கட்டணங்களை செலுத்தி வீசா காலத்தை நீடிப்புச் செய்யும் வசதி உண்டு.

அதற்கிணங்க, தற்போது இலங்கைக்கு வருகைத்தந்துள்ள மற்றும் 2024.03.31 ஆம் திகதிக்கு  அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு வருவதற்கு உத்தேசிக்கும் மேலே பெயரிடப்பட்ட  நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசாவுக்கான கட்டணத்தைச் செலுத்தி வீசா காலத்தை நீடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

Also Read : வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவி

மேலும் இணைய வழியில் அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா பிரிவிற்கு வருகைத்தந்து இந்த நீடிப்பை செய்துகொள்ள முடியும்.

தயவுசெய்து மேலே குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் இந்த விசேட இலவச வீசா திட்டம் அமுலில் இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும். ஏனைய நாட்டுப் பிரஜைகள் இலத்திரனியல் பயண அனுமதிக்கு (ETA) விண்ணப்பிக்கும் போது அமுலிலுள்ள பொதுவான நடைமுறைகள் மற்றும் விதிகளைப்  பின்பற்றுதல் வேண்டும் என்றும் திணைக்களம் கேட்டுள்ளது.

VIDEOS

Recommended