உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாளை மைத்திரிபால சிறிசேன விசாரணை
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 24, 2024, 7:38:41 AM
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறுசேன தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்கு அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Also Read : ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடந்த வாரம் மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னிடம் போதுமான சான்றுகள் இருப்பதாகவும் அவற்றை நீதிமன்றம் கூறும் பட்சத்தில் ரகசியமாக நீதவான் முன்னிலையில் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்டி ரான் அலஸ் போலீஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.
Also Read : களுத்துறை ஜனாஸா சங்க கிளை சிறைக் கைதிகளுக்கு நோன்பு நோற்பதற்கான ஏற்பாடு
அதன் அடிப்படையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்தனர்.
அந்த வகையில் நாளை திங்கட்கிழமை இது தொடர்பிலான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட இருப்பதாக போலீஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Also Read : சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நெருக்கடிகளை முன்னிலைப் படுத்தல்
இதே வேளை ஐக்கிய மக்கள் சக்தியின் கத்தோலிக்க சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மைத்த்ரி பால சிறிசேனவின் இந்த கருத்துக்கு எதிராக போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளை செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.