• முகப்பு
  • இலங்கை
  • சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நெருக்கடிகளை முன்னிலைப் படுத்தல்

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நெருக்கடிகளை முன்னிலைப் படுத்தல்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 8, 2024, 3:20:02 PM

தலைப்பு -: பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் கமிட்டி, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், காஸாவில், நிபந்தனையற்ற மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தைத் அறிவிக்கவும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

Also Read : றுதி போட்டியில் வை. எஸ். எஸ். சீ. அணி வெற்றி

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம், உலகம் பெண்கள் மீது அதன் கவனத்தை செலுத்துகின்ற போது, அது அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது அத்தோடு பாலின சமத்துவத்தை அடையத் தேவையான இலக்குகளை பிரதிபலிக்கிறது.

பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் கமிட்டி (பஒஇக), உலகெங்கிலும் உள்ள பெண்களுடனான ஒற்றுமையுடன் கை கோர்த்து நிற்கும் அதே வேளையில், பலஸ்தீனத்தில், குறிப்பாக காசாவில், எந்த விதமான முன்னோக்கமும் இல்லாமல் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த, பேரழிவுகரமான முற்றுகையின் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்ட பெண்களின் அவலநிலை குறித்து அதிக கவனம் செலுத்துகின்றது. 

Also Read : ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம்

குண்டு வீச்சுக்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும், காசாவை பட்டினியில் தள்ளியுள்ள, ஏற்கனவே பல சிறுவர்கள் பட்டினியால் இறந்துகொன்டிருக்கின்ற உதவி முற்றுகையை நீக்குவதற்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை பஒஇக மேற்கத்திய மற்றும் அரேபிய தலைவர்களின் அக்கறையின்மையைக் கண்டிக்கின்றது அத்தோடு பாதுகாப்புச் செயன் முறைகளில் அர்த்தமற்ற தந்திரங்களுக்கு அப்பால் ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றது

அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதனை உறுதி செய்யவும் அவசர யுத்த நிறுத்தத்தினை அறிவிக்கவும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதனை உறுதி செய்யவும் வலியுறுத்துகின்றது

Also Read : ஜாமியா நளீமியா கலாபீடத்தின் 50 வது ஆண்டு நிகழ்வு

2023 அக்டோபர் முதல் காசாவில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,500 க்கும் அதிகமாகும். அவர்களில் , 9,000 ற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 12,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளடங்குவர், ஆயினும் கண்மூடித்தனமான குண்டுவீச்சின் இடிபாடுகளில் புதையுண்டவர்களும் இதனுல் அடங்குவர்.

காசா மீதான போரை, பெண்களுக்கு எதிரான போர் என்றும், இஸ்ரேலிய குண்டு வீச்சுக்கள் தற்போதைய விகிதத்தில் தொடர்ந்தால், தினமும் சராசரியாக 63 பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுவார்கள் என்றும் ஐநா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

Also Read : தமிழரசு கட்சியின் ரகசிய கலந்துரையாடல் ஊடகங்களுக்கு கசிந்தது

ஏற்கனவே ஒவ்வொரு நாளும் 37 தாய்மார்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களின் குடும்பங்கள் பேரழிவிற்கு உள்ளாவதுடன் அங்கு சிறுவர்கள் அத்தோடு, பல புதிதாகப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பின்றி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதுடன் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டியவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானமற்ற முற்றுகையின் மூலம் 10 ல் 9 பெண்கள் உணவுக்காகத் போறாடுகின்றார்கள், பல நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு தமது உணவை தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஊள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Also Read : இந்திய பெருங்கடல் தகவல் பகிர்வு நிலையான செயல்பாட்டு நடைமுறை பாடநெறி

இடம்பெயர்ந்த 1.9 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும் மற்றும் சிறுமிகளுமாவர், அத்தோடு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் தங்குமிட அடைக்கலம் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், எங்கும் பாதுகாப்பாக எவரும் இல்லை.

கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக காசா பலவீனபாபடுத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது, அங்கு குடியிருப்பவர்களின் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டடுள்ளது, மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை இன்றியும் உணவின்றியும் உள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் அடிக்கடி கைதுகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும், கற்பழிப்புகளுக்கும் மற்றும் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுன்றனர்.

அவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கான சுகாதார ஆரோக்கியப் பொருட்கள் உட்பட அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு மறுக்கப்பட்டு பாரபட்சமான நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

Also Read : குப்பை கொட்டுபவர்களின் காணொளிகளை வெளியிட தயாராகும் இளையோர்

இவ்வாறான அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியம் ஆகியவற்றின் இந்த முறையான மீறல்களை உலகத் தலைவர்கள் பொருட்படுத்தாதவர்களாகக் காணப்படுகின்றனர்

தற்போது காஸா மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் யுத்தம் காஸா பகுதியை மெதுவாக நெரித்ததன் கொடூரமான விளைவு ஆகும். துரிதப்படுத்தப்பட்ட இனப்படுகொலையுமாகும்.

இது செயலுக்கான நேரம், வஞ்சகங்களுக்கு அல்ல.

பஒஇக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான அதன் கரிசனகளைப் பற்றி பேசுவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது அத்தோடு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கொலை, அங்கவீனப்படுத்தல் மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Also Read : தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தம் அளிக்கிறது

இதன் பொருள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய இராணுவத் தளபாடங்களை வழங்குவதை நிறுத்துவது, இஸ்ரேல் மீது தேவையான பொருளாதார தடைகளை விதிப்பது மற்றும் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நீடித்த யுத்த நிறுத்தத்தை கோருவது.

'காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை கண்டனம்' என்பதற்கு அப்பால் சென்று, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், ஆபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தீவிரமாக செயல்பட அரபுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

 இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பஒஇக, பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விரைவான, தடையற்ற, பாலின-பதிலளித்தல் மனிதாபிமான உதவிகளுக்கான பாதுகாப்பான அணுகலை உறுதி செய்வதற்கும் எந்த முயற்சியையும் விட்டுவிடக்கூடாது என்று கோரும் அதே நேரத்தில், காஸாவில் உள்ள பெண்களுடன் கை கோர்த்து நிற்கின்றது. அவர்களின் குரல்கள், மற்றும் அவர்களின் துன்பத்தைத் தணிக்க விரைவான மற்றும் விரிவான நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றது.

ஒவ்வொரு பெண்ணும் அவளது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், மரணம் மற்றும் பட்டினியின் கோரத்திலிருந்து விடுபட்டு, கண்ணியத்துடன் வாழக்கூடிய எதிர்காலத்தை நோக்கி ஒற்றுமையுடன் நகர வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended