• முகப்பு
  • ஆன்மீகம்
  • 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

ராஜா

UPDATED: May 9, 2024, 7:12:56 AM

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம்.

இங்கு போடிநாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார் வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். 

இங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றானதும் தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை 07.05.24  தொடங்கி வருகின்ற 14.05.24 செவ்வாய்க்கிழமை வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, காவடிகள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போடிநாயக்கனூர் அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக காவடி சுமந்தும், தேவராட்டம் ஆடியும், சிவன் வேடம் மற்றும் பெண்கள் வேடமணிந்தும் சுமார் 22 கிலோமீட்டர் கால்நடையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் திருவிழா தொடங்கி மூன்றாவது நாள் போடிநாயக்கனூர் கரட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவடிகள் சுமந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை100 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பாரம்பரிய ஆட்டமான தேவராட்டம் ஆடி காவடிகள் சுமந்து வீரபாண்டி வரை சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended