திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா.
ஜெயராமன்
UPDATED: Apr 21, 2024, 1:20:57 PM
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அருள்மிகு ஸ்ரீ பூமி நிலா தாயார் சம்மேத அதிஷ்ட வரதராஜ பெருமாள் ஆலய திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ 16 அடி உயரமுள்ள விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் ஆலய,
ஜீரோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது,
நான்கு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசால பூஜை நடைபெற்றது.
இந்த யாகசாலை பூஜையில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய உலக பொதுமக்கள் நோய்நொடியின்றி வாழ சிறப்பியாகம் வளர்க்கப்பட்டு இன்று காலை ஆலய எதிரே வளர்க்கப்பட்ட யாகசாலை பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயம் வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்த புனித நீர் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசத்தில் ஊற்றப்பட்டது,
இந்த நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் சிங்காரவேடிவேல் ஆய்வாளரா ராஜேந்திர பிரசாந்த் பிறவி மருதீஸ்வரர் ஆலய கோவில் செயல் அலுவலர் முருகையன் . மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.