• முகப்பு
  • ஆன்மீகம்
  • வைகுண்ட பெருமாள், வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில், பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வைகுண்ட பெருமாள், வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில், பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 8, 2024, 6:56:53 PM

தொன்மை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்று எட்டாம் நாள் காலை வைகுண்ட பெருமாள் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  

குழல் ஊதும் குழந்தை கண்ணனாக, கால்களை பின்னால் மடக்கி அமர்ந்த படி, ஒரு கையில் வெள்ளி செம்பும், மற்றொரு கையில் வெண்ணெயும் வைத்திருக்கும் அலங்காரத்தில் வைகுண்ட பெருமாளை காணும் போது பக்தர்களின் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

மேலும் எம்பெருமான், ஊதா மற்றும் அரக்கு நிற பட்டாடைகளை உடுத்தி தங்க வைர ஆபரணங்கள் சூடி அழகாக காட்சி அளித்தார். கிருஷ்ண அவதாரத்தில், ஆயர் பாடியில் குழந்தை கண்ணனாக வளர்ந்த போது, நடந்த லீலைகளை நினைவூட்டும் விதத்தில், இந்த திருக்கோல உற்சவம் நடப்பதாக வைணவ அறிஞர்கள் கூறுகின்றனர்.

வழி எங்கும் பக்தர்கள் குழந்தை கண்ணனுக்கு பசும்பால் மற்றும் பழங்கள் நைவேத்தியம் செய்தனர் .ஒகுழந்தை கண்ணனாக பல்லக்கில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

VIDEOS

Recommended