• முகப்பு
  • ஆன்மீகம்
  • அறநெறி ஆசிரியர்களின் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்கொண்டு செல்லப்படும் தேசிபட்டியல் பாபுசர்மா தெரிவிப்பு

அறநெறி ஆசிரியர்களின் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்கொண்டு செல்லப்படும் தேசிபட்டியல் பாபுசர்மா தெரிவிப்பு

ராமு தனராஜா

UPDATED: Oct 17, 2024, 5:02:12 AM

அண்மையில் தமிழ்நாடு, நவகளனிபுர அறநெறி பாடசாலை ஆசிரியர் குழுவின் தலைமை ஆசிரியை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் மேல்மாகாண சபையின் உறுப்பினருமான எஸ் ராஜேந்திரன் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மாவுடனும் கலந்துரையாடி தங்களுக்கான நூலை பெறுவதற்காக வருடாந்தம் 5000 ரூபாய் மாத்திரமே இந்து கலாசார திணைக்களத்தில் வழங்கப்படுவதாகவும் இந்த தொகை தற்போதைய சூழ்நிலையில் போதாமல் இருப்பதாகவும் இந்ததொகையை அதிகரித்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

இது தொடர்பில் பாபுசர்மா கருத்து தெரிவிக்கையில் , 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்து கலாசார அமைச்சராக இருந்து அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் நிலமைகளை நன்கு தெரிந்துகொண்டவர்.

அந்த வகையில் இணக்க அரசியலை முன்னெடுத்து செல்லும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிச்சயமாக கொழும்பு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி ஐனாதிபதியிடம் இவ்விடயத்தை முன்சென்றுகொண்டு அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை நிச்சயமாக வழங்கி தருவார் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended