இலங்கை நாட்டு மக்களுக்கு புத்தெம்புடன் பணியாற்றக் கூடியடிதாரு சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்துள்ளதாக மதப் போதகர் அருட் தந்தை ஜெரோம் பெரண்டோ தெரிவிப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 3, 2024, 9:19:58 AM
கடந்த ஒன்றடை வருடங்களுக்கு பின்னர் இலங்கை வாழ் மக்களுக்கு பணி செய்வதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக குளோரியஸ் சர்வதேச ஆலயத்தின் தலைவர் அருட் தந்தை ஜெரோம் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி ஹோல்பேஸ் ஹோட்டலில் இடம் பெற்ற தேசிய சர்வமத குரு ஒன்றியத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் அங்கு பேசுகையில் -
இருந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு இன்று ஒரு உடன்பாட்டுன் கூடிய ஒற்றுமைக்கு நாம் வந்துஇநாட்டின் எதிர்காலம்இசௌபாக்கியம் என்பவற்றை ஏற்படுத்த புதிய ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டின் மக்களின் விமோசனத்திற்காக ஒன்றிணையக் கூடிய கருணையினை இறைவன் எமக்கு கொடுத்துள்ளான் இது ஒரு புதிய உதயமாகவே நாம் நோக்குகின்றோம்.
கடந்த காலங்களில் தவறாக ஏற்பட்ட புரிந்துணர்வினால் தூரமாகியிருந்த நாம் இன்று அதிலிருந்து தெளிவினை கண்டு எமது சகோதரர்களுடன் ஒன்றாக இன்றைய தினம் அமர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமையானது ஒரு புதுத் தெம்பினை ஏற்படுத்துவனவாக அமைந்துள்ளது.
நாட்டுக்கு புதிய செய்தியொன்றினை சொல்லும் வகையில் எமது ஒற்றுமை இன்று மாறியுள்ளது.தேசிய ஒற்றுமையினை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு மிகவும் முக்கிய காரணமாக உள்ள மதத் தலைவர்களுடன் இந்த பணியினை எடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கபடவுள்ளது.
மஹிமான்வித சபையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர்.இது போன்று 100 நாடுகளுக்கும் மேல் எமது தொடர்பு இருக்கின்றது.ஆயர் பதவிக்கு மேலாலும் பல்;வேறு பதவிகள் காணப்படுகின்றன.எவ்வளவு பதவிகள் காணப்பட்டாலும் எமக்கிடையில் ஒற்றுமை இல்லை என்றால் எதையும் செய்ய முடியாது என்பது உண்மையாகும்.இன்றைய தினம்; எனக்கு பெரும் மகிழ்ச்சியானதாக இருக்கின்றது.கத்தோலிக்க திருச்சபை என்ற வகையில் பல்வேறு மக்கள் நன்மையளிக்கும் பணிகளில் நாம் ஈடுபட்டுவருகின்றோம்.
கத்தோலிக்க திருச்சபை என்பதை கடந்து தேவையுள்ள மக்களுக்கு பணி செய்யும் வகையில் அடிப்படை தேவைகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
அண்மையக் காலத்தில் இரு வருடங்களாக பாடசாலைகக்கு கற்றலுக்கான பணம் செலுத்த முடியாத சிங்களப் பாடசாலை மாணவருக்கு தேவையான நிதியினை நாம் வழங்கிவந்துள்ளோம்இஇது போன்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கும் உதவிகளை செய்துவருகின்றோம்.இந்த பணி தொடர்பில் நாம் பகிரங்கப்படுத்தவிரும்பவில்லை.இருந்த போதும் எமது பணியானது மனித நேயத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை சுற்றிக்காட்டவே இதனை கூறுகின்றேன்.
ஏதிர்காலத்திலும் எமது பணிகளை தேசிய சர்வமத குரு ஒன்றியத்தினுடன் இணைந்து முன்னெடுக்க தீர்மாணித்துள்ளதுடன்இஎமது இந்த உறுதி மொழியினை எழுத்து மூலமாக இந்த அமைப்பின் தலைவரிடத்திலும்இஏனைய உறுப்பினர்களிடத்திலும் இன்றைய தினம் கையளிக்கும் சந்தர்ப்பம் கிட்டியமையானது ஒரு வரலாற்று பதிவாகும் என்று அருட்திரு ஜெரான் பெர்ணான்டோ இதன் போது குறிப்பிட்டார்.
ALSO READ | இன்றைய நல்ல நேரம் 30-09-2024
இந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சர்வ மத குரு ஒன்றியத்தின் சர்வமத தலைவர்களான கெளரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர் சிவ ஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர பாபுசர்மா குருக்கள்ஈஷஇ அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் அருட்தந்தை டாக்டர் நிஷான் சம்பத் குரே பாதிரியார் ஆகியோர் கருத்துரைத்தனர்.