முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் சித்திரை திருவிழாவிளையொட்டி, கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ரமேஷ்
UPDATED: Apr 17, 2024, 11:20:04 AM
கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்.
இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும் தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது
இத்தலம் எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார் நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாததரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலம்.
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் கொடிமரம் அருகே சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடனும், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்களவாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினர்.
இதையடுத்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் 25 ஆம் தேதி திரு தேரோட்டம், நடைபெறுகிறது.
10 ஆம் நாளான 26 ஆம் தேதி வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா காவிரியில் தீர்த்தவாரியுடன் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றன.