• முகப்பு
  • ஆன்மீகம்
  • மீராவோடை உம்மு சுலைம் மகளின் அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா.

மீராவோடை உம்மு சுலைம் மகளின் அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Oct 21, 2024, 7:31:32 AM

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்  இயங்கும் உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிறு) புனாணை ICST பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராஸீக்  தலைமையில் இடம்பெற்ற விழாவில், பிரதம அதிதியாக ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் என்.பீ.எம்.அபூபக்கர் சித்தீக் (மதனி) கலந்து சிறப்பித்தார்.original/2

கெளரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹ்மது, ஜம்இய்யதுல் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுச்செயலாளர் ஏ.எல்.கலீலுர்ரஹ்மான் (MA) ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், பிரதேச மற்றும் பிராந்திய அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள், கல்வியலாளர்கள், அரச உயரதிகாரிகள்  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் விஷேட பேச்சாளராக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளரும் நாடறிந்த இஸ்லாமிய பிரசாரகருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் (மதனி) கலந்து கொண்டு விஷேட சொற்பொழிவாற்றியதுடன், கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி (MA), பிரதி அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஜி.சாதிக்கீன் (மதனி) மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள், பிரதேச பள்ளிவாயல்களின் நிருவாகிகள், அரபுக்கல்லூரிகளின் விரிவுரையாளர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த 64 மாணவிகள் "சுலைமிய்யா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கல்லூரி காலங்களில் சிறந்த முன்மாதிரிகளை வெளிப்படுத்திய ஐந்து மாணவிகள் தொகுதி வாரியாகத்தெரிவு செய்யப்பட்டு அதிதிகளால் மர்ஹூம் எம்.எஸ்.புஹாரி விதானை ஞாபகார்த்த விருதும் பணப்பரிசும்  வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

VIDEOS

Recommended