தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா.
பால முருகன்
UPDATED: Jul 26, 2024, 10:54:13 AM
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது.
உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
பனிமயமாதா பேராலயம்
ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள்.
சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடி மரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர்.
கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது.
ஆன்மீக செய்திகள்
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர்.
மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.