கும்பகோணம் அருகே திருநீலக்குடி உள்ள தூய அற்புத அன்னை தேவாலயத்தில் 25 ஆம் தேர் பவனி விழா.
ரமேஷ்
UPDATED: May 12, 2024, 6:45:50 AM
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடியில் உள்ள புனித அற்புத அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, 25 ஆம் ஆண்டு முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி புதன்க்கிழமை மாலை 6 மணிக்கு, பங்கு தந்தை செல்வக்குமார், தலைமையில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேரில் அற்புத அன்னை மாதா, புனித அந்தோனியார் , சம்மனசு, ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமைகள், பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், கிராமவாசிகள் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.